முகப்பு
தமிழ்நாடு

சிறு, குறு நிறுவனங்களுக்கு சர்வதேச வாய்ப்புகள்: மோடி

சிறு, குறு நிறுவனங்களுக்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகள் குவிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 2:14 PM
பகிர்:

சிறு, குறு நிறுவனங்களுக்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகள் குவிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மதுரையில் சிறு, குறு நிறுவனங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற டிஜிட்டல் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அதில், தொழில்முனைவோர் மத்தியில் பேசிய அவர், உலகலாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டுகின்றன.

சர்வதேச அளவிலான விநியோகச் சங்கிலியில் வலுவான பகுதியாக நாம் மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி வருகிறது.

பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்களின் உதிரி பாகங்கள் நமது சிறு, குறு நிறுவனங்களின் தயாரிப்புகளாக உள்ளன. இங்கு உற்பத்தியாகும் உதிரி பாகங்களையே பல நாடுகளின் பெரு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி வாகனங்களில் பயன்படுத்துகின்றன.

கரோனா காலகட்ட நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதில் சிறு, குறு நிறுவனங்களின் பங்கு பேருதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →