தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சிறந்த ஆட்சி: மோடி

DIN

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி குறித்து பேசிய நரேந்திர மோடி,

குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழ்நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்ஜிஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தனர்.

நல்லாட்சியை நடத்தி தமிழ்நாட்டிற்கு கல்வியையும் சுகாதாரத்தையும் கொடுத்துள்ளனர். நாடு வளரும்போது அதே வேகத்தில் தமிழ்நாடும் வளரும் என்பதே எனது உத்திரவாதம்.

தமிழ்நாட்டிலிருந்து ராணுவ தளவாடங்களைத் தயாரிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT