நெல்லையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 
தமிழ்நாடு

நெல்லை மக்களின் ஆசியோடு மீண்டும் பிரதமராவேன்!

தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் திமுகவிடம் பதில் இருக்காது.

DIN

நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நெல்லை, பாளையங்கோட்டையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நெல்லையில் அவர் பேசியது,

தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் திமுகவிடம் பதில் இருக்காது.

தில்லிக்கு தமிழகத்துக்கு இடையே இடைவெளி குறைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர்க் குழாய் திட்டம் 25 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது 1 கோடி வீடுகளுக்கு குழாய் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தான், தமிழகத்தின் எந்த மூளைக்குச் சென்றாலும், பெண்கள், தாய்மார்கள் என அனைவரும் என்னை வாழ்த்துகின்றனர்.

நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்து வருகின்றனர். உங்கள் வரியைத் திட்டங்களாக வழங்குகிறோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி வரை சென்று சேர்ந்துள்ளது.

ராமர் கோயில் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. திமுகவும், காங்கிரஸும் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைடெபற்று வருகிறது. ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என திமுகவினர் கேள்வி கேட்கின்றனர்.

நெல்லை மக்களின் ஆசியோடு மீண்டும் பிரதமராவேன். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT