கிண்டி - பரங்கிமலை ரயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரயில்கள் நிறுத்திவைப்பு!
பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பாதையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன
ரயில்வே பாதையின் பக்கத்தில் 5 அடி உயரத்தில் புல் வளர்ந்து வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது
உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரயில் கடந்து செல்லும் பொழுது, காற்றின் வேகத்தால் தீ பரவக்கூடும் என்பதால் 20 நிமிடங்களுக்கு மேலாக மின்சார ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.