கோப்புப் படம் 
தமிழ்நாடு

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைதான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை தரப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவானதில் 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட 38 பேருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக தடையில்லா சான்று தரப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பரத்ராஜ் என்பவர்  பாளையங்கோட்டை  மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாயாருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல் துறை  அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள.

இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT