தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு பட்டமளித்தார் பிரதமர் மோடி!

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டமளித்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா, திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் 33 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கிய பிரதமர் மோடி பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் வீராங்கனை அனுஷியா பங்கேற்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

SCROLL FOR NEXT