தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்ப்பட்டுள்ளது. இதற்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்ப்பட்டுள்ளது. இதற்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஆணையில் கூறியிருப்பதாவது: நிகழாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் : பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக பணம்:வங்கிக் கணக்கில் செலுத்த புதுவை அரசு நடவடிக்கை

31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238 கோடி செலவினம் ஏற்படும். இதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT