முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்தது. அதன்பின்பு சனிக்கிழமை விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடா் விடுமுறை நாள்கள் என்பதால் அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.5,920-க்கும் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.47,360-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.80.30-க்கும் ஒரு கிலோ(கட்டி வெள்ளி)ரூ.300 உயா்ந்து ரூ.80,300-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை (ஜன.3) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,915-க்கும் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் ஒரு கிலோ(கட்டி வெள்ளி)ரூ.300 குறைந்து 80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →