விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார். 
தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி!

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

DIN

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்  மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 28-ஆம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவின் போது சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய சரத்குமார், விஜயகாந்த் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தவர் சோகம் நிறைந்த முகத்துடன் கண்ணீர் மல்க விஜயகாந்த் நினைவிடத்தை பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.

பின்னர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் மணிமண்டபம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் கொடுத்த கோரிக்கையை குறித்து அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு வருகை தராததும், நடிகர் சங்கத்தின் மற்ற சில நடிகர்கள் வராததும் அது அவர்களுடைய விருப்பம் என்று சரத்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

குளுகுளு குல்பி... ப்ரியம்வதா!

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

SCROLL FOR NEXT