கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஜன.18ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் 

காவிரி நீர் ஒழங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. 

DIN

காவிரி நீர் ஒழங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. 

கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த கூட்டத்தில் டிச. மாதம் விநாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது.

மேலும் ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து விநாடிக்கு 1,003 கனஅடி நீர் திறக்குமாறும் அறிவுறுத்தி இருந்தனர். 

காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. 

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT