தமிழ்நாடு

ரூ.10,000 கோடியில் பூவிருந்தமல்லி-பரந்தூர் இடையே பறக்கும் ரயில்சேவை

DIN


பூவிருந்தமல்லி - பரந்தூர் இடையே அமைக்கப்படவிருக்கும் பறக்கும் ரயில் சேவை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவிருக்கிறது.

அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றதால், பயணிகள் அனைவரும் பூவிருந்தமல்லியிலிருந்து பறக்கும் ரயில் சேவை மூலம், பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையத்துக்கு எளிதாகச் செல்லலாம்.

பூவிருந்தமல்லி - பரந்தூர் இடையேயான பறக்கும் ரயில் சேவை அமைப்பதற்கான ஆய்வறிக்கை மாநில அரசிடம் அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த பகுதிகளுக்கு இடையே 43.63 கிலோ மீட்டர் தொலைவுக்கு 19 பறக்கும் ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இதற்கு ரூ.10,712 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஏ. சித்திக், தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இந்த ஆய்வறிக்கையை அளித்துள்ளார்.

பூவிருந்தமல்லியிலிருந்து பரந்தூர் இடையே, திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பறக்கும் ரயில் சேவை அமைக்கப்படவிருக்கிறது. இந்த ரயில் பாதையானது, விரைவில் உருவாகவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்துக்கும், திருமழிசையில் உருவாகவிருக்கும் பேருந்து முனையத்தையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட திட்டப் பணிகளும், அமையவிருக்கும் ரயில்நிலையங்களின் எண்ணிக்கையும் இறுதிக்கட்ட ஆய்வுகளுக்குப் பின் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. அந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகே இப்பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவையை கோயம்பேடு - ஆவடி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. 16.07 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் 15 ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. இதற்கு ரூ.6,376.18 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுளள்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT