தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஜியோ முதலீடு: முகேஷ் அம்பானி

மிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் குழுமம் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

DIN

மிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் குழுமம் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது, தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. 

இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம். 3.5 கோடி பயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம். 

உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்துதரக்கோரி பெண்கள் மனு

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

SCROLL FOR NEXT