கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: முழு விவரம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதேபோல் தாம்பரம் - தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா  சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி இடையே  ஜன. 11, 13, 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 

திருநெல்வேலி - தாம்பரம் இடையே  ஜன. 12, 14, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், சங்கரன்கோவில், சேரன்மாதேவி வழியாக இயக்கப்படுகிறது.

தாம்பரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா  சிறப்பு ரயில் (06001) ஜன.14 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். 

தூத்துக்குடி - தாம்பரம் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா  சிறப்பு ரயில் (06002) ஜன.15 மற்றும் 17 ஆகிய தேதிகளில்  தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT