தமிழ்நாடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்கத் தடை!

DIN

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்ற அமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி அரசு நிதியைப் பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தைச் செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்திருந்தனர். 

இதையடுத்து துணைவேந்தர் ஜெகன்நாதன் கைதான நிலையில், சேலம் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனிடையே உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கைந ரத்து செய்யக் கோரி ஜெகன்நாதன் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆவணங்களைச் சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து அவர் உத்தரவிட்டார். தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT