தமிழ்நாடு

தமிழகத்திலும் நாளை பொது விடுமுறை அளிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழாவையொட்டி தமிழகத்திலும் நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

DIN

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழாவையொட்டி தமிழகத்திலும் நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை(22-01-2024) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது. 
 இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன. 
 ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT