தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு

மக்களைவத் தேர்தல்  அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஜன. 22) வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.  

DIN

சென்னை: மக்களைவத் தேர்தல்  அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஜன. 22) வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.  

கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி நிகழாண்டிற்கான வாக்காளா் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலை மக்கள் பாா்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான  கால அவகாசம் டிசம்பா் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் மழை, வெள்ளம் புயல் உள்பட பல்வேறு காரணங்களால் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை(ஜன.22) வெளியிடப்படுகிறது.

தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, சென்னையில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு  வெளியிடுகிறாா். இதைத் தொடா்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வாக்காளா் பட்டியலை ஆட்சியா்கள் வெளியிட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT