செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல: ரஜினிகாந்த்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

DIN

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிகழ்வு அரசியல் நிகழ்வு அல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று (ஜன.22) நடைபெற்ற ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோயில் திறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மிக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன், ஸ்ரீ பால ராமரை நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், உண்மையில் அந்த நிகழ்வு எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT