ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி: திமுக நிர்வாகியின் முகநூல் பதிவால் சர்ச்சை 
தமிழ்நாடு

ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி: திமுக நிர்வாகியின் முகநூல் பதிவால் சர்ச்சை! 

அயோத்தி ராமருக்கு பிடித்த மாட்டக்கறி பிரியாணி என முகநூலில் பதிவு செய்த திமுக பிரமுகரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

அயோத்தி ராமருக்கு பிடித்த மாட்டக்கறி பிரியாணி என முகநூலில் பதிவு செய்த திமுக பிரமுகரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உத்தர பிரதேசத்தின், அயோத்தியில் நேற்று ராமர் சிலை பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள், சாதுக்கள் கலந்து கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் திமுக மற்றும் பாஜகவினருக்கு மோதல் முற்றி வருகிறது. 

இந்நிலையில்,  திமுக சட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூலில் ராமருக்கு பிடித்தது மாட்டுக்கறி பிரியாணி எனப் பதிவு செய்திருந்தது பொள்ளாச்சி நகர பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜின் முகநூல் பதிவு 

இதனிடையே தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் மற்றும் பாஜகவினருக்கு கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாஜகவினரிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர்.

அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி என்ற முகநூல் பதிவால் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT