தமிழ்நாடு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா தொடக்கம்!

DIN

அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை பிள்ளையார் வழிபாடு, வேள்வி உள்ளிட்டவை நடைபெற்றது. 

29ஆம் தேதி திங்கள்கிழமை காலை முதல் கால வேள்வி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

SCROLL FOR NEXT