நெல்லை குடியரசு தின விழா: தேசியக் கொடியில் சிக்கிய பலூன்!
திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் 22 பேருக்கு ரூ.6.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
காவல்துறையைச் சேர்ந்த 38 பேருக்கு முதல்வர் பதக்கங்களையும், 57 பேருக்கு மாவட்ட காவல்துறை பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 510 பேருக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்த விழாவில் மூவர்ண பலூனை பறக்க விட்டபோது தேசியக் கொடியில் பலூன் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பிரத்யேக ஏணி மூலம் பலூன்களை பிரித்து எடுத்து பறக்க விட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.