பவதாரணி 
தமிழ்நாடு

தாய் நினைவிடம் அருகே பவதாரணி உடல் நல்லடக்கம்

மறைந்த பின்னணி பாடகி பவதாரணி, அவரது தாய் மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

DIN


மறைந்த பின்னணி பாடகி பவதாரணி, அவரது தாய் மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னா், பவதாரணியின் உடல் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா்.

கொழும்பில் இருந்து இளையராஜா, அவரது குடும்பத்தினா் பவதாரணியின் உடலுடன் வெள்ளிக்கிழமை மதியம்  புறப்பட்டு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டது.

பாடகி பவதாரணியின் மறைவு வருத்தம் அளிப்பதாக இளையராஜாவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு நடிகா் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தாா். இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினா் பலரும் பவதாரணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். இயக்குநா் பாரதிராஜாவும் மிகுந்த வேதனையுடன் இரங்கல் பதிவு செய்துள்ளாா்.

மகள் பவதாரணியுடன் இளையராஜா உடனிருக்கும் படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிா்ந்து ‘அன்பு மகளே’ என பதிவிட்டுள்ளாா். பவதாரணி குழந்தையாக இருக்கும் போது அவருடன் இளையராஜா இருக்கும் புகைப்படத்தை அவா் உருக்கமாக பகிா்ந்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT