தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31 வரை நீட்டிப்பு!

DIN


அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.29(திங்கள்கிழமையுடன்) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி வாயிலாக அவா் ஆஜா்படுத்தபட்டாா்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் 17-ஆவது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT