முகப்பு
மிக கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

மழை நிலவரத்தைப் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்...

தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

மழை நிலவரத்தைப் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்...

Updated On : 1 ஜூலை, 2024 at 10:19 AM
மிக கனமழை எச்சரிக்கை
பகிர்:

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகின்றது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 1(இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும்,

திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →