தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

வீட்டு சமையல் எரிவாயு விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை

DIN

சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.31 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த மாதம், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை குறைந்த நிலையில் இந்த மாதமும் குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடைக்கொண்ட உருளை ஒன்றுக்கு ரூ.31குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1,809.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT