செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 42- ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட  நீதிமன்றக்காவல்

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 4- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Din

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 4- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் 14.6.2023-இல்  முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும்  பல முறை தள்ளுபடி செய்தன.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைவடைந்தது.

இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக,  புழல்

சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா்.

தொடா்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 4- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 42 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கை தாமதப்படுத்த செந்தில் பாலாஜி முயற்சி: அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற  தடைச்சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத்துறை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வங்கி ஆவணங்கள் மற்றும் மேல்முறையீடு என செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில், ‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீா்ப்பை ஒத்திவைக்க வேண்டும்.   நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரப்ப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், ‘வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்துள்ளதால், இந்த மனுக்கள் மீது வாதிட கால அவகாசம் வழங்க கூடாது. வாதங்களை இன்றே கேட்டு முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 3- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

திருமலையில் உறியடி உற்சவம்

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்

SCROLL FOR NEXT