புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அடிப்படை மனித உரிமையை மறுத்து, புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
சட்டங்களின் பெயா்கள் ஹிந்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அம்பேத்கா் இயற்றிய ‘சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
மேலும் எளிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் குற்றவியல் சட்டங்களின் பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு உடையதாகவும் தெளிவற்ாகவும் உள்ளன. எனவே, அரசியலமைப்பு சட்டத்துக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளாா்.