காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட திமுகவுக்கு எதிரான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை பங்கேற்றிருந்தார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் திமுகவுக்கு எதிராக உரையாற்றினார். அவர் பேசியதாவது, திமுக நகராட்சி மற்றும் வார்டு சீட்டுகளைக் காங்கிரஸுக்கு கொடுக்க மறுக்கின்றனர். இதன்மூலம், அவர்கள் நம்மை அடிமையாக வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆகையால், நாமும் திமுகவுக்கு எதிராக, எதிர்க்கட்சியைப் போல் செயல்பட வேண்டும். மேலும் கிராம சபை, பூத் கமிட்டி போன்றவை அமைப்பதற்குக் கூட நிதி அளிக்க மறுக்கின்றனர். எனவே, நாம் அனைவரும் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டுமே இதற்கான தீர்வுகாண முடியும் என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்றிருந்த செல்வப்பெருந்தகை பேசியதாவது, பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவிகிதம் வாக்குகளை வைத்திருந்தோம். ஆனால், தற்போது எவ்வளவு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் இருக்கும்போது, மற்றவர்களை குறை சொல்லக்கூடாது.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை நமது கட்சியில் சேருங்கள். இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி மற்றும், பதவியை வைத்துக்கொண்டு சும்மா இருப்பவர்களின் பதவியும் பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.