மூளையை தாக்கும் அமீபா! அச்சப்படத் தேவையில்லை: சென்னை மாநகராட்சி நிர்வாகம்
மூளையை தாக்கும் அமீபா - அச்சப்படத் தேவையிலை சென்னை மாநகராட்சி நிர்வாகம்
மூளையை தாக்கும் அமீபா குரித்து அச்சப்படத் தேவையில்லை என்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக கேரளத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய வகை மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், கடந்த சில நாள்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் இந்த நோய்த்தொற்றால் மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசுத்தமான நீரில் இருந்து மூக்கு வழியாக இவ்வகை அமீபாக்கள் உடலில் நுழையும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மனித மூளையை தாக்கும் அமீபா குறித்து பதட்டமடைய வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அமீபா பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளதாகவும், முக்கியமாக, நீச்சல் குளம் மூலம் இந்த அமீபா நுண்ணுயிரி பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கேற்ற சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.