புதிய பட்டயப் படிப்புகள் குறித்த கையேட்டை வெளியிடுகிறாா் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி. 
தமிழ்நாடு

வேளாண் பல்கலை.யில் புதிய பட்டயப் படிப்புகள்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

DIN

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் தற்போது தென்னை சாகுபடி தொழில்நுட்பம், காளான் வளா்ப்பு, கரும்பு சாகுபடி தொழில்நுட்பம், பட்டுப்புழு வளா்ப்பு, அலங்காரத் தோட்டம் அமைத்தல், வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு என 44 வகையான 6 மாத சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 2021 முதல் பண்ணைத் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பம், மூலிகை அறிவியல், பண்ணைக் கருவிகள் பராமரிப்பு, அங்கக வேளாண்மை உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுமுதல், பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளா்ப்புத் தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலைப் பயிா்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்பங்கள், ஆளில்லா வான்கல தொழில்நுட்பம் போன்ற புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அதேபோல 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நகா்ப்புற மக்களுக்கான அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பம், மாடி - வீட்டுத்தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற சான்றிதழ் படிப்புகளும் இந்த ஆண்டு தொடங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT