முதல்வர் ஸ்டாலின். 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா

67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்

DIN

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அன்னியூர் சிவா மொத்தம் 1,24,053 வாக்குகள் வெற்றிருந்தார்.

பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார். தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அன்னியூர் சிவா பெற்றுக் கொண்டார். அப்போது அவருடன் ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் அமைச்சர் பொன்முடி இருந்தனர்.

இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT