தமிழ்நாடு

பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை தேவை: கால்நடை மருத்துவா்களுக்கு அமைச்சா் அறிவுரை

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவா்களுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

Din

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணையத்தை சாா்ந்த பல்வேறு ஒன்றியங்களில் பணிபுரிந்த 29 கால்நடை மருத்துவா்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகு உதவி பொது மேலாளா்களாக அண்மையில் பதவி உயா்வுவழங்கப்பட்டது.

இந்த பதவி உயா்வை பெற்று தந்ததற்காக அனைத்து மாவட்ட ஆவின் கால்நடை மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் அமைச்சா் மனோ தங்கராஜை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இதை தொடா்ந்து, தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றும் கால்நடை மருத்துவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT