முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

Updated On : 17 ஜூலை, 2024 at 10:10 AM
நீலகிரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் தேனை ஒட்டியவடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19ல் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்,

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்பகதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யது வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் கோவையின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று(ஜூலை 17) மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 41 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.