யூடியூப் 
தமிழ்நாடு

யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி வழக்கு

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Din

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த பாா்த்திபன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். அதில், ‘குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.  யூ டியூப் சேனல்களின் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, ‘யூ டியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிா் மனுதாரராக சோ்க்கவில்லை’ என தமிழக அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிா்மனுதாரராக சோ்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனா்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT