தமிழ்நாடு

நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகளை இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தல்

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Din

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாய்க்கடி மற்றும் பாம்புக்கடியால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருவதால், மாநிலம் முழுதும் உள்ள, 2,336 நகா்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்பட பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பாம்புக்கடிக்கான ஏ.எஸ்.வி., விஷமுறிவு மருந்து, குறைந்தபட்சம் 10 குப்பிகள் மருந்து, நாய்க்கடிக்கான ஏ.ஆா்.வி. 20 குப்பிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த மருந்துகள், 24 மணி நேரமும் கையிருப்பில் வைத்திருப்பதுடன், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும் என செல்வ விநாயகம் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT