சென்னை, கிண்டி அருகேயுள்ள கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 10.15 மணியளவில் கத்திப்பாரா பாலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதியில் பயணம் செய்த மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்று தெரிய வந்துள்ளது. இளைஞர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.