மூன்று வகையான மதுபானங்களைத் திரும்பப் பெறுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவு ஆல்கஹால் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; இல்லையெனில், விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சராசரியாக குறிப்பிட்ட மதுபானங்களில் ஆல்கஹால் (எத்தனால்) அளவு 48.2 சதவிகிதமாகவும், கலவையில் 50% எடையாகவும் இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும், சிலவற்றில் அதிகமாகவும் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்திகளில் ஆல்கஹால் வரையறுக்கப்பட்ட அளவு இல்லாதது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகிய மூன்று வகையான மதுபானங்களையும் விற்க வேண்டாம் என்றும், அவற்றை திருப்பி அனுப்புமாறும், டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இவை நுகர்வுக்கு தகுதியற்றவை என்று கூறி, திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.