கொலை செய்யப்பட்ட பாஜக நிா்வாகி செல்வகுமாா். 
தமிழ்நாடு

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: தப்ப முயன்ற நபரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

சிவகங்கையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கு: தப்ப முயன்ற நபரை சுட்டுப் பிடித்த போலீஸ்

DIN

சிவகங்கையில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் கைதகியுள்ள நபர் தப்ப முயன்றதால் அந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (53). இவா் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலராகவும் இருந்து வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை- இளையான்குடி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்து, சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வந்தனா். இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடையதாக 5 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விசாரணையின் போது, வசந்த் என்ற நபர் காவலரை தாக்கி விட்டு தப்ப முயற்சித்துள்ளார். தப்பியொட முயற்சித்த வசந்தை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

இதனிடையே, வசந்த் தாக்கியதில் சார்பு ஆய்வாளர் பிரதாப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவலர் பிரதாப் மற்றும் தப்பியோட முயன்ற வசந்த் ஆகிய இருவரும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT