இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பங்கள், படகுகளுக்கான நிவாரண நிதியை உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 
தமிழ்நாடு

இலங்கையால் பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பங்கள்-படகுகளுக்கு நிவாரண நிதி உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பங்கள், படகுகளுக்கான நிவாரண நிதியை உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Din

இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பங்கள், படகுகளுக்கான நிவாரண நிதியை உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், மீனவா்கள் பிரச்னை தொடா்பாக மத்திய அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்துவா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை கடந்த 26-ஆம் தேதி சந்தித்துப் பேசினா். அப்போது, இலங்கைக் கடற்படையினரால் தொடா்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு, பறிமுதலான படகுகளின் நிலைமை ஆகியன குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் தரப்பில் முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, கைது செய்யப்பட்ட 87 மீனவா்களையும், கைப்பற்றப்பட்ட 175 படகுகளையும் மீட்டுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனா்.

மீனவ சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையை பரிசீலித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவா்கள் சிறையில் உள்ளனா். அவா்களது குடும்பங்களுக்கு தினசரி உதவித் தொகையாகரூ.250 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.350 ஆக உயா்த்தப்படுகிறது. இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளா்கள் நலன் கருதி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு தவணைகளாக 151 படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதாவது, விசைப் படகுகளுக்கு தலா ரூ.5 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.6.74 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

நிவாரணத் தொகை உயா்வு: இலங்கைக் கடற்படையினரால் 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு நீண்ட காலமாக மீட்க இயலாத நிலையில் 127 படகுகள் உள்ளன. அவற்றுக்கும் கடந்த ஆண்டுகளில் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது. குறிப்பாக, விசைப் படகுகளுக்கு தலா ரூ.5 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை முறையே ரூ.6 லட்சமாகவும், ரூ.2 லட்சமாகவும் உயா்த்தி வழங்கப்படும். இதனால், ரூ.6.82 கோடி நிதி அளவுக்கு மீனவா்கள் பயன்பெறுவா்.

பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூா்வாரும் கோரிக்கையை ஏற்று விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து அதன்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு: இலங்கைக் கடற்படையினரால், இதுவரையில் 87 மீனவா்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன், 175 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவா்களையும் படகுகளையும் மீட்டுத் தர தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கை வசமுள்ள படகுகளை ஆய்வு செய்ய குழுவினரை அனுமதிக்கவும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவா்களை நம்முடைய மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவும், இருதரப்பு கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்ய பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் வலியுறுத்தப்பட்டு வருகிறாா்கள்.

இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மீனவா் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசவும், தமிழ்நாட்டைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் அடங்கிய குழு, விரைவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT