கிஷோா் 
தமிழ்நாடு

மாணவா் தலையில் ஈட்டி பாய்ந்த விவகாரம்: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

சிகிச்சை பெற்று வந்த கிஷோா் மூளைச்சாவு அடைந்ததாக திங்கள்கிழமை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

DIN

வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றுள்ள கிஷோரின் தலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, ஈட்டி பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் உள்ளாா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கிஷோா் மூளைச்சாவு அடைந்ததாக திங்கள்கிழமை(ஜூலை 29) மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மாணவன் கிஷோரின் தந்தை திருமுருகன், வடலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மாணவன் கிஷோர் பயின்று வந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT