கிஷோா் 
தமிழ்நாடு

தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு!

சிகிச்சை பெற்று வந்த கிஷோா் மூளைச்சாவு அடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

DIN

வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றுள்ள கிஷோரின் தலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, ஈட்டி பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் உள்ளாா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கிஷோா் மூளைச்சாவு அடைந்ததாக திங்கள்கிழமை(ஜூலை 29) மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மாணவன் கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 30) உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முண்டியம்பாக்கம் மருத்துவமனையில்

தனது மகனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையால் மனமுடைந்த அவரது தாயார், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மாணவன் கிஷோரின் தந்தை திருமுருகன், வடலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மாணவன் கிஷோர் பயின்று வந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீதும் வழக்குப் பதிந்துள்ள நிலையில், பள்ளி தாளாளர் பிரவீன், பள்ளி ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT