கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளையும்(ஜூலை 31), நாளை மறுநாளும்(ஆகஸ்ட் 1) நீலகிரி, கோவையில் மிககனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.