வயலூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் DIN
தமிழ்நாடு

வயலூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 30 பேர் படுகாயம்

கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து.

DIN

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே இரு தனியார் பேருந்துகள் புதன்கிழமை காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கான காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை நோக்கியும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூரை நோக்கியும் 200-க்கும் அதிகமான பயணிகளுடன் இரு தனியார் பேருந்துகள் இன்று காலை சென்று கொண்டிருந்தன.

அப்போது தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே வந்து கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் நூலிழையில் கவிழாமல் தப்பியது.

வயலூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன் பக்கமும் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக விபத்து நடந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் கூறும்போது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், மது போதையில் இருந்ததாகவும், அதோடு செல்போன் பேசிக்கொண்டும் அதிவேகமாக பேருந்தை ஓட்டி வந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT