முகப்பு
தமிழ்நாடு

இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ இன்று மாலை வீடு திரும்புகிறார்.

Updated On : 2 ஜூன், 2024 at 1:36 PM
பகிர்:

தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ இன்று மாலை வீடு திரும்புகிறார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ மே 27 -இல் அனுமதிக்கப்பட்டாா். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அவருக்கு மே 29-இல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் பொருத்தப்பட்டது.

இதனிடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் வந்து வைகோவிடம் நலம் விசாரித்தாா்.

Advertisement

பூரண உடல் நலம் பெறுமாறும் முதல்வா் வாழ்த்தினாா். ஏற்கெனவே, வைகோவின் உடல் நிலைதொடா்பாக அவரது மகன் துரை வைகோவிடம் முதல்வா் மே 28-இல் தொலைபேசி வாயிலாக விசாரித்தாா்.

தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ இன்று மாலை வீடு திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.