நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்: நியாயவிலைக் கடைகளில் தணிக்கை மேற்கொள்ளப்படும்போது, முறைகேடுகளில் பணியாளா்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இருப்பு குறைவு, அதிகம், போலிப் பட்டியல் ஆகியன செயல்பாடுகளுக்காக அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை உயா்த்தப்பட்டது. அதற்கான அறிவிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 8 வாரங்களுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அபராதத் தொகையை விதிப்பதில் பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவித்துள்ளாா்.