முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுகிறேன்: ஜே.சி.டி. பிரபாகரன்

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுகிறேன் என ஜே.சி.டி. பிரபாகரன் அறிவிப்பு

Updated On : 8 ஜூன், 2024 at 12:43 PM
பகிர்:

ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகுவதாக ஜே.சி.டி. பிரபாகரன் அறிவித்துள்ளார். மேலும், அதிமுகவை ஒன்றிணைக்க புதிய குழு அமைக்கப்படும் என்று ஜே.சி.டி.பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி அறிவித்துள்ளனர்.

எடப்பாடி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பின்போது புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுகவை ஒருங்கிணைக்க ஜே.சி.டி. பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஜே.சி.டி. பிரபாகரன், பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தேன். பதிவாக வெளியிடுவது மட்டும் போதாது என்பதால் தற்போது இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். யார் தலைமையை என்பதை குறிப்பிட்டு சொல்வது எங்கள் வேலை அல்ல. அனைவரிடம் கலந்து பேசி அதிமுகவை ஒன்றிணைப்பதுதான் எங்கள் வேலை. சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ் அனைவரும் அமர்ந்து பேசி ஒருமித்த கருத்து எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.

புகழேந்தி பேசுகையில், கே.சி. பழனிசாமி எனக்கு நேர் எதிரானவர். ஆனால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜே.சி.டி. சொன்னதால் இன்று ஒன்றாக வந்துள்ளோம். மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிமுக 7 இடத்தில் டெபாசிட் வாங்கவில்லை. கடந்த முறை ஒரு இடம். தற்போது அதுவும் இல்லை. பல இடங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வத்துக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

கே.சி.பழனிசாமி பேசுகையில், நாங்கள் எந்த அணியையும் சாராமல்.. அதிமுக ஒருங்கிணைக்கும் பணியில் முயற்சி செய்ய இருக்கிறோம். அதிமுகவுக்குள்ளேயே இருந்துகொண்டு தேசிய கட்சியை ஆதரிக்கக் கூடாது. எந்த குடும்பத்திற்கும் அதிமுக சென்று விடக்கூடாது என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →