முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு தொடக்கம்

Updated On : 9 ஜூன், 2024 at 5:00 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் காலிப் பணியிடங்கள் எழுத்துத் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இதில், நிகழாண்டு இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரைவாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட மொத்தம் 6244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜன. 30-ஆம் தேதி வெளியானது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக ஜன. 30 முதல் பிப். 28 வரை பெறப்பட்டன.

குரூப் 4 தோ்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி. தோ்வை எழுத சுமாா் 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். குரூப் 4 தோ்வு, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இதற்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →