கோப்புப்படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி!

புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் பலியாகினர்.

DIN

புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் பலியாகினர்.

வீட்டின் கழிவறைக்கு அருகே இருந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு வெளியேறியதால் 3 பெண்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை, கழிவறைக்கு சென்ற நிலையில், விஷவாயுத் தாக்கி மயக்கமுற்றுள்ளார். நீண்ட நேரமானதால் அவரை காப்பற்ற சென்ற அவரது மகள் காமாட்சியும் விஷவாயுத் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

இருவரையும் மீட்க சென்ற காமாட்சியின் மகள் 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியும் மயக்கடைந்துள்ளார்.

இந்நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அப்போது பரிசோதனை மருத்துவர்கள் செந்தாமரை, காமாட்சி ஆகியோர் முன்னதாகவே பலியானதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பாக்கிய லட்சுமியும் பலியானார்.

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT