தமிழ்நாடு

மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டிய மு.க. ஸ்டாலின்! ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை!!

பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டி, ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை

DIN

பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டி, ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை இன்று (ஜூன் 11) வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் கடந்த மாதம் நடைபெற்றது.

இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கி வாழ்த்தினார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், மாரியப்பன் தங்கவேலு, தமிழ்நாட்டிற்குப் பெருமை மட்டுமல்ல; சாதனைகள் பல செய்ய இளைஞர்களுக்கு ஊக்கமும் கூட! அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வாழ்த்தினேன்! எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT