தமிழ்நாடு

பெங்களூரு, மைசூரு ரயில்கள் ரத்து

Din

சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேஎஸ்ஆா் பெங்களூரு - பெங்களூரு கன்டோன்மன்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் மெயில் விரைவு ரயில் (எண்: 12658) ஜூலை 2, 9, 30, ஆக.6, 13 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூலை 3, 10, 31, ஆக.7, 14 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு செல்லும் காவேரி விரைவு ரயில் ஜூலை 1, 2, 8, 9 ஆகிய தேதிளிலும், மறுமாா்க்கமாக ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

திருப்பதி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கருடாத்ரி விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மேலும், சாம்ராஜ் நகரில் இருந்து ஜோலாா்பேட்டை, ஆம்பூா், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயில் ஜூலை 1, 8 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூலை 2, 9 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT