கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அவகாசம்!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயங்க ஜூன் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

DIN

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 17 ஆம் தேதி வரை இயங்க போக்குவரத்துத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும் ஏராளமான ஆம்னி பேருந்துகள், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போல இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருந்தது.

இதற்காக பேருந்து உரிமையாளா்களுக்கு 3 முறை அவகாசம் வழங்கிய போதிலும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’ எனப்படும் வாகன பதிவு எண்ணைப் பெறாமலே இருந்து வருகின்றன. எனவே, ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடைவிதித்தது.

மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து, வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த நேரமும் நடந்த தூரமும் - சுயசரிதை

வரப்பெற்றோம் (03-02-2026)

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

பிப். 6 முதல் தவெக விருப்ப மனு விநியோகம்!

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT